Thursday, September 24, 2009

நான் – நீ – மழை - 4

காதலியை காதலை
எல்லாவற்றோடும் ஒப்பீடு
செய்தாகிவிட்ட்து
உன்னை எதனோடும்
ஒப்பிட்டுக்காட்ட
முடியவில்லை
மழையைத் தவிர

******

எப்போது மழை பெய்தாலும்
இதழோரம் புன்னகையை
வரவழைத்து விடுகிறது
ஒரு மழைநாளில்
உன்னைக்
இறுக்கக் கட்டிக்கொண்டு
கட்டிலில் கிடந்த ஞாபகங்கள்

*****

எத்தனை
மழைகள்
பார்த்து
ரசித்து
சலித்தாலும்
உன்னோடு
கொண்டாடிய
மழைப்பயணம்
மட்டும்
எப்போதும் பசுமையாக

******

அர்த்தமற்ற
பேச்சுகள்
கொஞ்சம்
கொஞ்சமாய்
அமுங்கிப்
போனது
மழை
தொடங்கிய
நன்னாளில்

6 comments:

இரசிகை said...

saaral...aththanaiyum!!!

இரா.கார்த்திகேயன் said...

அருமையான கவிதை மழை, வானாகி பொழிகிறாய் நீ..............

Kirouchenasamy said...

அர்த்தமற்ற
பேச்சுகள்
கொஞ்சம்
கொஞ்சமாய்
அமுங்கிப்
போனது
மழை
தொடங்கிய
நன்னாளில்



மிக அருமையா இருக்கு இது....

பாபு said...

kavithai nalla iruku charls

சென்ஷி said...

ரொம்ப நாளைக்கப்புறம் காதலியோட தனியா வராம மழையையும் துணைக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்களா சார்லஸ் :))

//காதலியை காதலை
எல்லாவற்றோடும் ஒப்பீடு
செய்தாகிவிட்ட்து
உன்னை எதனோடும்
ஒப்பிட்டுக்காட்ட
முடியவில்லை
மழையைத் தவிர//

இதுல முன்னாடி காதலின்னு வந்திருக்கே. அது யாரு தலைவரே :)

Elan said...

மழைக் கவிதைகள் மன வாசனையைக் கிளறிவிட்டுப் போகின்றன...

வரிகளனைத்தும் அருமை மழைக் காதலரே...