Thursday, March 11, 2021

USTAD Hotel - சாப்பாட்டுப் புராணம்

கேரள உணவுத்தேடலின் வரிசையில் சென்ற வாரம் கண்ணில் பட்ட பகுதி USTAD HOTEL. ஈ.சி.ஆர் பகுதியில் வெட்டுவாங்கேணியில் இருக்கும் உணவுக்கடை தான் இது. முன்பு இதே இடத்தில் பார்டர் பரோட்டா கடை இருந்தது. இப்போது இந்தக் கடை. கடையின் பெயர் தான் என்னை முதலில் ஈர்த்தது. உணவுப் பிரியனான நான் மிகவும் ரசித்த மலையாளப் படம் உஸ்தாத் ஹோட்டல். அதே பெயரில் கடையைப் பார்த்ததும் உற்சாகமடைந்தேன். அப்போதே முடிவெடுத்தேன் அந்த வாரத்தின் சனி, ஞாயிறு இங்கே தான் என்று.

சனிக்கிழமை மாலை நண்பருடன் சென்றேன். ஷவர்மா என்றாலே சிக்கன் ஷவர்மா என்றாகிவிட்ட நிலையில் பீஃப் ஷவர்மா என்ற போர்ட் கண்ணில் பட்டதும் உடனே ஆர்டர் செய்தேன். கூடவே சிக்கன் ஷவர்மாவும். அதோடு சேர்த்து பழ பஜ்ஜி என்று கோவை பகுதியில் அழைக்கப் படும் நேந்திரம் பழத்தின் பஜ்ஜி, ப்ரவ்னி. ஷவர்மா out of the world. அதுவும் பீஃப் ஷவார்மா மிகவும் ருசியாக இருந்தது. இன்றைக்கு இது போதும் என்று முடிவெடுத்து கிளம்பி விட்டோம். ஷவர்மாவை பார்த்த ஆர்வத்தில் படம் எடுக்கவில்லை.

ஞாயிறு காலை உணவுக்கு மறுபடியும் வந்தடைந்தோம். இப்போது புட்டு, ஆப்பம், கடலைக்கறி.







சிறப்பான உணவு. Tummy full என்று சொல்லக்கூடிய அளவுக்கு சாப்பிட்டோம். அதோடு விலையும் கம்மி. A must visit place for Kerala food lovers. இன்னும் இந்தக் கடையில் Explore செய்ய நிறைய உணவு வகைகள் இருக்கு. ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் சென்று ருசி பார்க்கத் திட்டம்.



No comments: