Wednesday, February 24, 2021

மஹாராஜா மீல்ஸ் - சாப்பாட்டுப் புராணம்

வித்தியாசமான உணவுகள் என்றாலே தேடித் தேடிப் போய் சாப்பிடுவது ஒரு அலாதியான விஷயம். இந்த YouTube food reviews வந்தப் பிறகு, கடைகள் பத்தின தகவல்கள் நிறைய கிடைக்குது. ஆனா அதுல பல நேரம் ஏமாற்றமே மிஞ்சும். சில நேரம் மட்டுமே நம் மனதுக்கு, நம் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியான கடைகள் சிக்கும். அப்படி ஒரு இடம் தான் வடபழனி பகுதியில் இருக்கும் The Little India Restaurant ல கிடைக்கும் மஹாராஜா மீல்ஸ். 


நாம வித்தியாசமான உணவுகள், ருசியான உணவுகள்ன்னு தேடித் தேடி சாப்பிடும் போது நம்மைச் சுற்றி இருக்கும் ஆட்களும் அதே மாதிரி ரசனையோட அமைவது நமக்கு கிடைக்கும் பேறு. அப்படி ஒரு தோழி என்கிட்ட சொன்ன இடம் தான் இது. ’ரிவியூஸ் பாத்தேன். நல்லா இருக்கு ஒரு நாள் அங்க போலாம் நாமன்னு’ சொன்னாங்க என்கிட்ட. அவுங்க சொல்லி ஆல்மோஸ்ட் ரெண்டு வருஷம் ஆச்சு. கடைசி வரை அவுங்க கூட அங்க போக வாய்ப்பு கிடைக்கல. நானும் ரெண்டு வருஷமா ப்ளான் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தேன். போன மாசத்துல ஒரு நாள் DMART போய்ட்டு பசிக்குதே எங்க போலாம்னு யோசிக்கும் போது ஞாபகம் வந்துச்சு இந்த இடம். சரி இன்னைக்கு சம்பவம் அங்க தான்னு முடிவு பண்ணிட்டு வண்டிய அங்க விட்டாச்சு. ரொம்ப சின்ன இடம் தான். ஆனா நீட்டா மெயிண்டெயின் பண்ணிருந்தாங்க. Friendly service. 



மொதல்ல சூப்ல இருந்து ஆரம்பிப்போம். முட்டை உடைத்து ஊற்றப்பட்டிருந்த அந்த சூப் உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


அப்புறம் இலை போட்டு பரிமாறப்பட்டது மஹாராஜா மீல்ஸ். மொத்தம் 7-8 வகையான சைட் டிஷ்ல நாம நாலு தேர்ந்தெடுக்கனும். வழக்கமான சிக்கன் அயிட்டம் வேணாம்னு முடிவு பண்ணிட்டு மீன், இறால், நண்டு, கணவாய் தேர்ந்தெடுத்தேன். 






சில காய்கறிகள் பரிமாறப்பட்டது, ஆனா வழக்கம் போல அந்தப்பக்கம் எட்டிக்கூட பாக்கல. குழம்புக்கு முன்னாடி கருவாடு தொக்கு, இறால் தொக்கு, சிக்கன் தொக்குனு தொக்குகள் பரிமாறப்பட்டது. அப்புறம் மீன் குழம்பு, மட்டன் குழம்புன்னு குழம்பு வகைகள் பரிமாறப்பட்டது. அதி அற்புதம்னு சொல்லனும்னா நான் இதைத்தான் சொல்லுவேன். சிறப்பான மதிய உணவு. 

நல்ல மீல்ஸ் சாப்பிடனும்னு முடிவு பண்ணிட்டா ஒரு நாள் நீங்க இந்தக் கடையைத் தேர்ந்தெடுக்கலாம். 

No comments: