The Happening

வழக்கமா நான் இந்த திரில்லர் படங்கள் பார்ப்பது இல்லை... ஒரே மாதிரியான காட்சி அமைப்பு எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை போன்றவை தான் காரணங்கள்... அதிலும் குறிப்பாக பாம்பு, முதலை, சுறா தாக்குவது மாதிரியான படங்கள் அலர்ஜி... அவர்கள் சீரியஸாக காட்ட நினைக்கும் காட்சிகளை கொட்டாவி விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இன்று பார்த்த The Happening மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய படம், எனக்கு பிடித்த Mark Wahlberg நடித்திருக்கிறார். முதல் காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை டக்கென்று எகிற வைத்துவிட்டது. சிலபல காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், அடுத்து என்னவென்று ஒரு ஆர்வத்தை உருவாக்கி இருந்தது படம். ஒரு காட்சி அப்படியே டக்கென்று பயமுறுத்திவிட்டது... பாக்கலாம்.. பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும். பார்க்கலாம்...
இந்தப் படத்தையும் நான் http://www.yify-torrents.com/ ல் இருந்து தான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்....