Thursday, August 04, 2022

Koode - 2018

 



சும்மா போர் அடிக்குது ஒரு ஃபீல்குட் மூவி வேணும்னா கண்டிப்பா பாக்க வேண்டிய படம் இது. படம் போட்டதுமே முதல் 10 நிமிஷம் என்னடா மொக்கை படமா இருக்கும் போலன்னு நெனச்சேன். ஆனா கொஞ்ச நேரத்துல படம் அப்படியே உள்ள இழுத்துக்குச்சு.

ப்ருத்திவிக்கு இள வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சொல்லாமல் சொல்லி, பார்வையாளர்களின் ஊகத்திற்கே விட்டது சிறப்பு. ப்ருத்வியின் நடிப்பு மிக அருமை. ஆரம்பத்துல குடும்பத்தோட பெருசா ஒட்டாம இருந்த அந்த நிலை, ஜெனிய அந்த வேன்ல பாத்து ஜெர்க் ஆகி கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு வந்த இடங்கள், பாருவின் வீட்டில் அவளுக்கு இஷ்டம்ன என்கூட வரலாம்னு சொன்ன இடம் எல்லாம் அழகான உருத்தாத நடிப்பு. பாருவோட நடிப்ப சொல்லவே வேணாம். அவ்ளோ அழகு. மலையாளத் திரைப்படங்களை நான் இப்போ எல்லாம் ரொம்ப ரசிக்கிறதுக்குக் காரணம் அதோட இயல்பு. ஹீரோயினையும், இயற்கை அழகையும் மலையாள சினிமா மாதிரி அவ்ளோ இயல்பா, அழகா வேற யாராலையும் காட்டவே முடியாது. சில விஷயங்கள் இப்படித்தான் முடியப்போகுதுன்னு நமக்கு நல்லாவே தெரிஞ்சாலும் அதை நோக்கிய திரைக்கதையின் பயணம் நம்மை உருத்தாம கைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போகுது.

 ஜெனியோட இரங்கல் கூட்டத்துல ஜெனியப் பத்தி ஒரு பையன் சொல்லி பாடுற அந்தப் பாட்டுல ஆரம்பிக்குது ஜெனியோட பயணம். பாக்குற நமக்கு “வாட்???”னு ஒரு அதிர்ச்சி கொடுத்து சிரிக்க வச்சு, ஜெனியோட அறிமுகம் ஆரம்பிக்குது. நஸ்ரியாக்குனு அளவெடுத்து செஞ்ச கேரக்டர். நஸ்ரியா தவிர யாராலும் செய்ய முடியாது இந்தக் கேரக்டரை. ஒவ்வொரு காட்சியிலும் நஸ்ரியா நிரம்பி வழிகிறார்.

 பெற்றோரின் பாசம், தங்கையின் மீதான அன்பு, நஸ்ரியா ப்ருத்வி கோபப்படும் போது first fight ன்னு மகிழ்வது, ப்ருத்வி மற்றும் பாரு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி. நிறைய happy moments நிறைஞ்ச அழகான படம்.

A complete feel good movie. கண்டிப்பா பாருங்க… Disney plus Hotstar ல இருக்கு.