Wednesday, November 23, 2022

காலம்

எல்லோரையும் வேகமாகக் கடத்தும் காலக் கண்ணாடி நம்மை நிறுத்தி வைத்து நிதானித்து கடத்தும் போது ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி நிறையாதது. நம்மோடு பயணித்து காலத்தின் கணக்குகளில் ஜொலித்து வேகமாக கடந்து போனவர்களை அதே இடத்தில் ஆண்டுகள் கடந்தும் நின்று பார்க்கும் நிலை துரதிஷ்டவசமானது.

நின்று நிதானித்து பயணிப்பது எல்லோருக்கும் சொகுசானது அல்லவே. காலம் நம்மையும் ஒரு நாள் முன்னோக்கி வேகமாகக் கடத்தும். நமக்கான காலம் நம்மை இழுத்துச் செல்லும்.