நம் நட்பு
நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர
வேறொன்றுமில்லை என்று.
பேருந்து நிறுத்தம்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
மணிக்கணக்காய்
பேசிக்கொண்டு இருந்தோம்
எத்தனை பேருக்கு
புரிந்திருக்கும்
நாம் நண்பர்கள் என்று.
உறவு
உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
நட்பு என்று
ஒன்று உள்ளதென்று.
விசாரிப்பு
உன்னைச் சந்திக்க
வரும்போதெல்லாம்
எனைப் பார்த்து குரைக்குமே
உன் வீட்டு நாய்,
அதை மிகவும்
விசாரித்தேன் என்று
சொல்.
தோழி
இலக்கியம், இதழியல்,
புரட்சி, சமூகம்,
அரசியல், காதல்,
நட்பு, பாசம்,
வறுமை, சினிமா,
பட்டினி சாவுகள்,
இசை, கடிதங்கள்,
உன் காதலன், என் காதலி,
என்று என்னதான்
பேசவில்லை நாம்
ஒரு தோழி இருப்பது
எத்தனை செளகர்யம்....
நட்பூ
இன்றும் கூட
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ என்றாவது
ஒரு நாள் வருவாய்
உன்னால் முறிந்து
போன நட்பில்
மீண்டும் பூ பூக்குமென்று...
-----
அன்று
உனக்கும் எனக்கும்
ஏதோ சின்ன மனவருத்தம்
நெடுநேரம் நிலவிய
இறுக்கமும் மௌனமும்
உடைந்தது
எதற்காகவோ
நாம் கைகோர்த்துக் கொண்ட
அந்த நொடிப் பொழுதில்....
சாட்சி
நம் உறவையொத்த
சந்தேகப் பார்வைகளுக்கு
சாட்சியாய்
கைகோர்த்துக் கொண்டு
நிதானமாய் நடந்து
பேசிக் கொண்டிருந்தோம் நாம்.
நம் நட்பு
உன் கணவனுக்கும்
என் மனைவிக்கும்
புரிந்து கொள்ளும்
பாக்கியம் கிடைக்குமா
நம் நட்பை?
தோழி
தோழி
நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்
எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
என் துயரங்கள்
அனைத்தையும்
கனவுகள் சுமந்து வரும்
உன் கண்கள்
மறக்கடித்து விடும்
இந்தக் கல்லூரி
மதிற் சுவருக்குள்
பயங்களோடு வந்த
எனக்கு நம்பிக்கையின்
சிறகுகளைத் தந்தவள் நீ
நட்பின் கதவுகளை
திறந்து விட்டவள் நீ
ம்ம்ம்
வார்த்தைகளின்
வர்ணஜாலங்கள் மூலமாய்
நம் நட்பை
சொல்லி விடத்தான்
நினைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து
வலி மட்டுமே
மிஞ்சுகிறது....
நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர
வேறொன்றுமில்லை என்று.
பேருந்து நிறுத்தம்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
மணிக்கணக்காய்
பேசிக்கொண்டு இருந்தோம்
எத்தனை பேருக்கு
புரிந்திருக்கும்
நாம் நண்பர்கள் என்று.
உறவு
உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
நட்பு என்று
ஒன்று உள்ளதென்று.
விசாரிப்பு
உன்னைச் சந்திக்க
வரும்போதெல்லாம்
எனைப் பார்த்து குரைக்குமே
உன் வீட்டு நாய்,
அதை மிகவும்
விசாரித்தேன் என்று
சொல்.
தோழி
இலக்கியம், இதழியல்,
புரட்சி, சமூகம்,
அரசியல், காதல்,
நட்பு, பாசம்,
வறுமை, சினிமா,
பட்டினி சாவுகள்,
இசை, கடிதங்கள்,
உன் காதலன், என் காதலி,
என்று என்னதான்
பேசவில்லை நாம்
ஒரு தோழி இருப்பது
எத்தனை செளகர்யம்....
நட்பூ
இன்றும் கூட
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ என்றாவது
ஒரு நாள் வருவாய்
உன்னால் முறிந்து
போன நட்பில்
மீண்டும் பூ பூக்குமென்று...
-----
அன்று
உனக்கும் எனக்கும்
ஏதோ சின்ன மனவருத்தம்
நெடுநேரம் நிலவிய
இறுக்கமும் மௌனமும்
உடைந்தது
எதற்காகவோ
நாம் கைகோர்த்துக் கொண்ட
அந்த நொடிப் பொழுதில்....
சாட்சி
நம் உறவையொத்த
சந்தேகப் பார்வைகளுக்கு
சாட்சியாய்
கைகோர்த்துக் கொண்டு
நிதானமாய் நடந்து
பேசிக் கொண்டிருந்தோம் நாம்.
நம் நட்பு
உன் கணவனுக்கும்
என் மனைவிக்கும்
புரிந்து கொள்ளும்
பாக்கியம் கிடைக்குமா
நம் நட்பை?
தோழி
தோழி
நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்
எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
என் துயரங்கள்
அனைத்தையும்
கனவுகள் சுமந்து வரும்
உன் கண்கள்
மறக்கடித்து விடும்
இந்தக் கல்லூரி
மதிற் சுவருக்குள்
பயங்களோடு வந்த
எனக்கு நம்பிக்கையின்
சிறகுகளைத் தந்தவள் நீ
நட்பின் கதவுகளை
திறந்து விட்டவள் நீ
ம்ம்ம்
வார்த்தைகளின்
வர்ணஜாலங்கள் மூலமாய்
நம் நட்பை
சொல்லி விடத்தான்
நினைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து
வலி மட்டுமே
மிஞ்சுகிறது....
2 comments:
ரசித்தேன் !
///எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சண்டைகள்
எத்தனை கோபங்கள்
என் துயரங்கள்
அனைத்தையும்
கனவுகள் சுமந்து வரும்
உன் கண்கள்
மறக்கடித்து விடும்/// உண்மை ........ரசிக்க ஆரம்பித்தேன், ஆனாலும் வலிக்கிறது..............
Post a Comment