இந்த வருடம் தான் முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மிக அருமை... எங்க ஊர்ல புத்தக கண்காட்சினு சொல்லிட்டு ஒரு சின்ன இடத்துல வச்சிருப்பாங்க... இங்க வந்து பார்த்தா.. அம்மாடியோவ்... எவ்வளோ பெருசு... எத்தனை புத்தகங்கள்... ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, நல்ல வேளை எப்போதும் காலியாகவே இருக்கும் இன்னுடைய பர்ஸிலும், பாக்கெட்டிலும் பணம் இருந்தது( இந்த புத்தக கண்காட்சிக்காகவே இந்த மாச சம்பளத்த செலவு பண்ணாம வச்சிருந்தோம்ல..), போய் நிறைய புத்தகங்கள் வாங்கினேன், சே குவேரா வரலாரு முதல், தபூ சங்கர் கவிதைகள் வரை நிறைய வாங்கினேன்... மனசுக்கு கொஞ்சம் திருப்தி...
புத்தக கண்காட்சி வாசலுக்குள் நுழையும் போது விழியனை சன்திக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் சென்றேன்... ஆனால் அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தவுடன், என்னையும் மறந்தேன், விழியனையும் மறந்தேன்.. வீட்டுக்கு வந்தவுடன் தான் எனக்கு விழியன் ஞாபகமே வந்தது...
அப்புறம் எழுத்தாளர் ஞாநி அவர்களைச் சந்தித்து உரையாடினேன், தபூ சங்கரை சந்தித்தேன், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும் சந்தித்தேன்... மறக்க முடியாத நாள் அது... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்...
No comments:
Post a Comment