Monday, April 23, 2007

அன்புத் தோழி 2

எங்கேயோ தூரமாய்

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
மின்னஞ்சல்களில்
ஹாய் சொல்லிப்
பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்

நடுவில் சிக்கித்
திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்

மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில் மோதுகிறது

அலுவலக சிற்றுண்டிச்சாலையும்,

வரவேற்பறையும், பழச்சாறுக்கடையும்
"காப்" பயணங்களும்,
ஸ்பென்சர் பிளாசாவும்
கவிதைகளும் அடிக்கடி
உன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌

என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

7 comments:

கமல் ராஜன்.பா said...

ஆகா.. பிரமாதமான கவிதை சார்லஸ்.. உங்க தோழி கொடுத்து வைத்தவள்தான்.. தம்பியின் அன்பை என் சார்பாக கூறிவிடுங்கள்..

ஜே கே | J K said...

தோழியின் அன்பு உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்...

அருமை சார்லஸ்

சென்ஷி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க :))

Unknown said...

உங்க தோழி கொடுத்து வைத்தவள்தான்

Natchathraa said...

உங்களோட ஒவ்வொரு வரியும் என் நண்பனை நினைவு படுத்துகிறது எனக்கு...

மழைக்காதலன் said...

நன்றி நட்சத்திரா.... முடிந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்புங்கள்....

இரசிகை said...

nallaayirukku!