என் நாட்குறிப்பின்
வண்ணங்கள் சிறகு முளைத்து
சன்னலின் வழியே
காற்றில் கலந்து
வானவில்லாய் விரிந்தது
என் தூரிகையில்
அதை எடுத்து
மீண்டும் என் படபடக்கும்
நாட்குறிப்பில்
கரைத்துவிட முயற்சிக்கிறேன்
கைகளுக்குள் சிக்காமல்
உயரே சென்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கிறது
என் எண்ணங்களும், வண்ணங்களும்.....
1 comment:
எண்ணங்கள் உயரவே இருக்கட்டும்
எட்டிப் பிடியுங்கள் உங்கள் உழைப்பால்
Post a Comment