Sunday, June 21, 2020

யாரெல்லாம் வெற்றியாளன்?

            


            யாரெல்லாம் வெற்றியாளர் ஆக முடியும்? இந்தக் கேள்வி கேட்கப் படும் போது எல்லோரும் சொல்லும் பதில் எல்லோருமே ஆக முடியும் என்பது தான். ஆம் எல்லோருமே வெற்றியாளர்கள் ஆக முடியும். ஆனால், அதற்கான அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே.

            வெற்றி பெற்ற எல்லோருமே சில விஷயங்களின் ஒன்றுபடுவார்கள். அவர்களின் குண நலன்களை, அவர்களின் வெற்றிக்கான காரணிகளை அலசினால். அவர்களின் ஒரு சில பண்புகள் ஒத்துப் போவதைக் காண முடியும். 

            ஒருமுறை வாரன் பப்ஃபெட் மற்றும் பில்கேட்ஸ் இருவரையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் உங்கள் வெற்றிக்கான காரணியாக நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் இருவருமே சொன்ன பதில் Focus. தமிழில் இதை குவியம், குவிமையம் என்றெல்லாம் சொல்வார்கள், கொஞ்சம் மொழிபெயர்ப்பில் விட்டுக் கொடுத்தால் இதை கவனம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒருமுகப் படுத்தப்பட்ட கவனம். குவிக்கப்பட்ட கவனம். செய்யும் செயலில் இருக்க வேண்டிய ஒருமுகப் படுத்தப் பட்ட கவனம். அது மட்டுமே உங்களை வெற்றியாளனாக ஆக்கும்.

No comments: