Sunday, December 07, 2008

மழை

ஒவ்வொரு வருடமும்
முந்தைய வருடங்களை
நினைத்துப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சோடு
நிறுத்திக்கொண்டோம்...

முந்தைய வருடங்களுக்கும்
சேர்த்து மொத்தமாய்
இந்த வருடம்
கொட்டித் தீர்த்தது
மழை

**********

சுவற்றில் வரைந்து வைத்த ஸ்டம்பு
ரன் அவுட்டுக்கு வைத்திருந்த கற்கள்
எங்களின் விளையாட்டு கால் தடங்கள்
என அனைத்தையும்
மொத்தமாக அள்ளிக்கொண்டு
போனது இன்று அடித்த
புயல்....

**********

பலவருட கணக்குகளை
முடித்துப் போட்டது போல்
பெய்த மழையில்
சேர்ந்து போனது
எங்கள் வீட்டு வெள்ளாடும், கோழியும்....

7 comments:

gayathri said...

ஒவ்வொரு வருடமும்
முந்தைய வருடங்களை
நினைத்துப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சோடு
நிறுத்திக்கொண்டோம்...

முந்தைய வருடங்களுக்கும்
சேர்த்து மொத்தமாய்
இந்த வருடம்
கொட்டித் தீர்த்தது
மழை

intha varusa mazaiyala rompa pathikka pattu irukengala pa

மழைக்காதலன் said...

ரொம்ப பாதிப்புங்க...

Anonymous said...

உங்கள் கவிதைகள் அருமை தாங்கள் அனுமதி அளித்தால் உங்கள் கவிதைகளை நமது தமிழ்த்தோட்டத்திலும் வெளியிட ஆவலாக உள்ளோம்..... http://tamilparks.50webs.com உங்கள் பதிலை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்

Balaji said...

கவிதைகளெல்லாம் அருமை மற்றும் எதார்த்தமாய் உள்ளது! வெள்ளாடும் கோழியும் நனைந்து கண் முன்னே நிற்கிறது! வாழ்த்துக்கள்!

Thenie said...

சுவற்றில் வரைந்து வைத்த ஸ்டம்பு
ரன் அவுட்டுக்கு வைத்திருந்த கற்கள்
எங்களின் விளையாட்டு கால் தடங்கள்
என அனைத்தையும்
மொத்தமாக அள்ளிக்கொண்டு
போனது இன்று அடித்த
புயல்....

இனியாவது பக்கத்து வீட்டு கண்ணாடி ஜன்னல்கள் பிழைத்துக் கொள்ளும்

பலவருட கணக்குகளை
முடித்துப் போட்டது போல்
பெய்த மழையில்
சேர்ந்து போனது
எங்கள் வீட்டு வெள்ளாடும், கோழியும்....

புரியாணி ஆகி இருக்க வேண்டியது :(

கவிதைகள் அருமை தோழர்

இரசிகை said...

mazhaiyai thittaamal thittum kalai therikirathu ungal varikalil...

Anonymous said...

I would like to talk to you.