இன்னிக்கு என்னோட பிறந்தநாள். என் பிறந்தநாளை எப்போதும் நான் கொண்டாடியது இல்லை, என் அம்மாவும், என் நண்பர்களும் தான் கொண்டாடுவார்கள். தஞ்சையில் எனக்கு இருந்த நண்பர்கள் அனைவரும் சென்னையில் இருக்கின்றன்ர், இருவரைத் தவிர என் தோழியும் என் தோழன் கிஷோரும். இந்தமுறை என்னோட பிறந்தநாளைச் சிறப்பா கொண்டாடனும்னு முடிவெடுத்து இருந்தா என் தோழி. காலையில் என் அலுவலகம் வந்தார்கள் இருவரும். ஏன் என்னன்னு கேக்க கூடாது உடனே கிளம்பு என்றனர். சரியென்று கிளம்பினேன். இரண்டு பேக்கரி சென்று அலைந்து ஒரு வழியாக எனக்கு கேக் வாங்கிக்கிட்டு கிளம்பினாங்க. என்கிட்ட கேக் வாங்கனும்னு சொல்லி இருந்தா அலையாம நம்ம அலுவலகம் பக்கத்துலேயே வாங்கி இருக்கலாமே என்றேன். அதற்கு ஒரு முறைப்பு தான் பதிலாக வந்தது.
எங்கடா போறோம்னு கேட்டா முறைச்சு பாத்து அமைதியா வான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாங்க. மேம்பாலத்தை விட்டு இறங்கும் போது கொஞ்சம் கூட யோசிக்காம சரட்டுன்னு வலப்பக்கம் திரும்பினா என் தோழி, என்னடா இது பிறந்தநாள் அன்னிக்கு பிரச்ச்னையில மாட்டி விட்டுடுவாளோன்னு நினைச்சு கொஞ்சம் பொறுமையா வண்டிய திருப்பினேன். அவ வண்டிய நிறுத்தின இடம் அட்லாப்ஸ் தியேட்டர். இப்போ தான் படம் ஆரம்பிச்சுச்சு என்றார்கள். உள்ளே கேக், தீப்பெட்டி அனுமதி இல்லை என்றனர். இன்னிக்கு இவரோட பிறந்தநாள் தியேட்டர்ல கேக்வெட்டி கொண்டாடனும்னு சொன்னதும் தியேட்டர்காரன் சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டான். ஆஹா இன்னிக்கு நாம அவ்ளோ தான், ஊர்காரங்க கிட்ட உதை வாங்கனும் போலன்னு நினைச்சுகிட்டு உள்ளே போனேன். இப்போ வெட்டக் கூடாது கொஞ்ச நேரம் படம் ஓடினதும் வெட்டுங்கன்னு சொன்னான் தியேட்டர்க்காரன். இப்போ உதை வாங்குனா என்ன கொஞ்ச நேரம் கழிச்சு உதை வாங்குனா என்ன, எப்படியும் உதை உறுதின்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா என்னை காப்பாத்திடுச்சு இந்தப் படம். உள்ளே நுழையும் போது கதாநாயகன் அறிமுகப் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் மொக்கையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, தொடர்ச்சியா கதாநாயகி அறிமுகம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அந்தப் பொண்ணை கொஞ்சம் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பத்தி நிமிஷத்துல என் தோழி நண்பா மன்னிச்சிடு உன் பிறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு பெரிய மொக்கை படத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. வந்ததும் போகக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம், இயக்குனர் ஏதாச்சும் செஞ்சிருப்பார்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது வரிசையா ரெண்டு காட்சிகள் ஒன்னு வடிவேலுவைக் காலிங்பெல் அழுத்தச்சொல்லி ஒரு குழந்தை மாட்டி விடுமே அந்தக் காட்சி இதில் வந்தது வடிவேலுவுக்கு பதில் சந்தானம் அண்ட் கோ. அடுத்து தம்பி படத்துல ஹீரோயின் நடனம் ஆட முடியாம ஹீரோ ஒருத்தனை அடிச்சு அந்த நடன நிகழ்ச்சி நின்னு போயிடுமே அதை நினைவு படுத்தும் காட்சி, ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் தான் மாற்றம். கொஞ்சம் கூட சொந்தமா யோசிக்க மாட்டாய்ங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது இவுங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு அரை மணி முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கலாம்னு சொன்னாய்ங்க. சரி இருக்கலாம்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துல நண்பா கிளம்பலாம்னு சொன்னா என் தோழி. சரி இதுக்கு மேல வேணாம்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். கேக் என்னோட அலுவலகத்தில் பிறகு வெட்டப்பட்டது.
படம் ஆரம்பிச்சு சரியா 40 நிமிஷத்துல வெளியேறிட்டோம்.. என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெளியேறியது... என்ன நினைச்சுக்கிட்டு இயக்குனர்கள் இந்தமாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியல. இவனுங்க யார்க்கிட்டயாவது உதவி இயக்குனரா பணியாற்றினா நல்லா இருக்கும். இல்லைன்னா திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டு வரட்டும். நடிக்கும் அனைவருமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்லாம செயற்கையாகவே பேசுகின்றனர் ஆரம்பத்தில் இருந்து. காமெடி என்ற பெயரில், சந்தானம், கருணாஸ், பாஸ்கர் என எல்லோருடைய மொக்கையும் சராசரிக்கு மிகக் கீழே. இதையெல்லாம் ஒரு படம்னு ரிலீஸ் பண்ணி, வெற்றிப்படம், வெற்றி நடைன்னு போட்டு நம்மையெல்லாம் ஏமாற்றும் சன்பிக்சர்ஸ் வாழ்க...
No comments:
Post a Comment