Thursday, July 16, 2009

மழைக்காலம்

எப்போதாவது
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி

*****

நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை

*****

என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்

*****

ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்

நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்

******

முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு

******

6 comments:

சூர்யா said...

ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்
....சூப்பர் சார்லஸ்

இரசிகை said...

mazhai maathiriye...

iyalba..
kulumaiya..
vaasanaiya..
silirppa..

azhaga irukkuthu unga kavithai:)

sithu said...

தஞ்சை தரணியின் புகழ் பரவுது இவ்வய்யகம் முழுவதும்,நண்பா இப்பிறவியின் பயனை நீயும்,நாங்களும் சேர்ந்தே அனுபவிப்போம் நம் தமிழ் வாயிலாக !

கோல்ட்மாரி said...

நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை
----
மிக அருமை வரிகள் சார்லஸ் அண்ணா

கோல்ட்மாரி said...

என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்

சூப்பரா சொன்னிங்க
உண்மை ,,,, பல நேரம் ....

Anonymous said...

தங்களின் மழை தொடர்பான கவிதைகள் நன்றாக உள்ளன. எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு
நன்றி
நினா.கண்ணன்