அவசரத்தில் விட்டு வந்த
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது
*******
தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....
*****
எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???
11 comments:
மழை காதலரே, நல்ல முன்னேற்றம் வார்த்தைகளில்.
வாழ்த்துக்கள்.
அருமை மழைக் காதலன்....
மிக அருமையான கவிதைகள்,வாழ்த்துக்கள்
மிக அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள்...
மிக அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள்...
நல்லா இருக்கு சார்லஸ்.
அவசரத்தில் விட்டு வந்த
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது//
பாலுக்கு முட்டும் குழந்தைக்கு தெரிவதில்லை தாயின் உயிரற்ற நிலை
அதனை எடுக்க கூட வழியில்லாது ஓடும் மக்களின் நிலை இங்கு
நம் கனவுகள் புதையவில்லை விதைக்கப்பட்டுள்ளது நம்மவர்கள் உடல்களுடன் நிச்சயம் தோண்டி எடுப்போம் விரைவில்
நன்றி சாரு
நன்றி என் நண்பனே...
கடவுளை நேரில் அழைக்கிறேன், தமிழ் ஈழமகள் உயிர் பெற,
"நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்"
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்” - என்று சொல்லி பெருமைப்பட்டோம். தமிழ் செம்மொழியாக்கப்பட்டது என்று மார்தட்டிக் கொண்டோம். ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ தை மாதத்தை புத்தாண்டாக அறிவித்ததில் அளவில்லா மகிழ்வடைந்தோம். ஆனால் நம் உதிரத்தின் உறவுகளின் வாழ்வில் ‘வலி’ மட்டுமே பிறந்ததைக் கண்டு வழியறியாது உள்ளோம்.
இது புதைந்த கனவு அல்ல மழை காதலரே, உள்ளத்தில் குமுறிக் கொண்டுதான் இருக்கு....
வெடித்து சிதரும் போது தெரியும் அதன் வீரியம்...
arumai.......
Post a Comment