Friday, February 01, 2008

நீ - 2



உனக்காக சேமிக்கப்பட்ட‌
முத்தங்கள் எல்லாம்
சண்டை பிடிக்கின்றன என்னிடம்
எப்போது உன்
காதலியிடம்
எங்களைச் சேர்த்து
முக்திபெறச்
செய்வாய் என்று

*******

உனக்காக எனது
முத்தங்கள் அளவுக்கதிகமாக‌
உற்பத்தி செய்யப்படுகின்றது
சேமிக்கவும் வழி இல்லாமல்
பிறருக்கு கொடுக்கவும் முடியாமல்
தேங்கிக் கிடக்கிறது என்னிடம்
சீக்கிரம் வந்து பெற்றுக்கொள்

******

இந்த முத்தங்களின்
இம்சை தாங்க முடியவில்லை
ம‌ட‌லில் அனுப்புவ‌தால்
என்னிட‌ம் கோப‌ம் கொள்கின்ற‌ன‌
தேவ‌தை உன்னைக் க‌ண்டு
நேரில் கொடுத்தால் தான்
அவை பிறவிப்பயனை
அடையுமாம்....

3 comments:

Unknown said...

good continue it, keep in fixed depoist

Unknown said...

///முத்தங்களின்
இம்சை தாங்க முடியவில்லை
ம‌ட‌லில் அனுப்புவ‌தால்
என்னிட‌ம் கோப‌ம் கொள்கின்ற‌ன‌///
முத்தங்கள் எப்போது பேச ஆரம்பிததன நேரில் கொடுத்து பிறவிபயனை அடையா வாழ்த்துக்கள், முத்தம் இம்சை அல்ல அன்பின் வெளிப்பாடு

cheena (சீனா) said...

அதிக அளவில் உற்பத்தியாகும் முத்தங்களை விரயமாக்கலாமா ? உரியவரிடம் சேர்த்து விட வேண்டாமா ?

நல்ல கற்பனை - நல்வாழ்த்துகள்