Saturday, January 26, 2008

சிறகைத் தேடி......

வெறுமையின் கைகளில்
சிக்கிய மனதின்
இறக்கைகள் அறுபடுகின்றது

அறுபட்ட மனதின்
குருதியில் தோய்ந்த
நினைவுகளால்
நீண்டு போகிறது இரவு

இருளின் நீண்ட
கருமையில் இறக்கைகள்
தேடி அலைந்து மீண்டும்
வெறுமையின் கைகளுக்கே
பலியானேன்

நினைவுகளின் சன்னலின்
வழியே தாவிக்குதித்து
பறக்க முற்படுகின்றேன்
எண்ணங்களின் வழியே
வளர்ந்து விரிகிறது
சிறகுகள்.....

1 comment:

Anonymous said...

நல்லா எழுதியிருக்கிறீங்க!சிறகுகளைப் பற்றி எழுத எனக்கும் பிடிக்கும்
அன்புடன் அருணா
அன்புடன் அருணா