26 சூன் 2008 "தி இந்து" நாளிதளில் வந்த செய்தி.... உங்களுக்காக..... இது ஆங்கில வடிவத்தின் மொழியாக்கம்....
மதமில்லாத ஜீவன்
மதமில்லாத ஜீவன், இந்த 58 வார்த்தைகள் கொண்ட பாடம் தான் கேரளாவின் சமீபத்தைய சர்ச்சை.... அதனுடைய மொழியாக்கம் இங்கே......
"தங்கள் குழந்தையுடன் வந்த பெற்றோரை இருக்கையில் அமரச்சொன்ன பின், தலைமையாசிரியர் விண்ணப்பப்படிவத்தை நிரப்பத்தொடங்கினார்....
"மகனே உன்னுடைய பெயர் என்ன?"
"ஜீவன்"
"நல்ல பெயர், அப்பாவின் பெயர் என்ன?"
"அன்வர் ரஷீத்"
"அம்மாவின் பெயர்?"
"லட்சுமி தேவி"
தன்னுடைய தலையை உயர்த்தி தலைமைஆசிரியர் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டார்
"என்ன மதமென்று எழுத?"
" ஒன்றும் இல்லை, மதம் இல்லையென்று எழுதுங்கள்"
"சாதி?"
"அதற்க்கும் அப்படியே எழுதுங்கள்"
தலைமைஆசிரியர் நாற்காலியில் சாய்ந்து கொண்டு கேட்டார்:
"இவன் வளர்ந்தவுடன் இவனுக்கு மதம் தேவைபடுவதாக இவன் உணர்ந்தால் என்ன செய்வது?"
"அப்படி அவன் உணர்ந்தால் அவனுக்கு தேவையான மதத்தை அவனே தேர்ந்தெடுக்கட்டும்...."
இப்படி பெற்றோர்கள் இருந்தால் கண்டிப்பாக சாதிகள் இல்லாத, மதங்கள் இல்லாத இந்தியாவைப் பார்க்க முடியும்... ஆனால் கேரளாவில் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் குறிப்பாக பா.ஜ.கவினர் பாடங்களில் கம்யூனிசக் கருத்துகள் புகுத்தப்படுவதாகக் கூறி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்....
1 comment:
[அப்படி அவன் உணர்ந்தால் அவனுக்கு தேவையான மதத்தை அவனே தேர்ந்தெடுக்கட்டும்...."]
பிடிச்சிருக்கு இந்த வரிகள்.. ஜாதி, மதம் இல்லாத தேசத்தை தேடிக் கொண்டிருகிருக்கிறேன்..
வாழ்த்துகள் மழைக்காதலன்
Post a Comment