Friday, July 11, 2008

அன்புத்தோழி 8ம் வரிசை

என்னை வேரோடு
பிடுங்கி சிலுவையில்
அறைகிறது
நம் சின்னச் சின்ன
சண்டைகளுக்குப் பின்
நீடிக்கும்
நீண்ட மௌனம்

4 comments:

MSK / Saravana said...

ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு போட வந்து இருக்கிறீர்கள்..
வருக. :)

தணிகை said...

மௌனத்தின் பிறகு உயிர்த்தெழுவீங்கல்ல;-))))))))

Aruna said...

//மழை எப்போதும் யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை, அனைவரையும் நேசிக்கும் மழை. நான் அந்த மழையை நேசிப்பவன். மாலை நேரத்து மழையை சன்னலோரத்தில் அமர்ந்து தேனீர் கோப்பையோடு ரசிப்பது சுகம். லேசாக தூரல் விடும் போது, வீட்டிற்குத் தெரியாமல் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு மழையில் நனைந்துக் கொண்டே ஊர்சுற்றுவது சுகம். அந்த மழைப்பெண்ணைக் காதலிப்பவன் நான்... மழைக்காதலன்//

இது ரொம்ப நல்லா இருக்கு...

நானும் ஒரு மழைப் பைத்தியம்!!! ஓரிரண்டு மழைப் பதிவும் போட்டிருக்கிறேன்....


//என்னை வேரோடு
பிடுங்கி சிலுவையில்
அறைகிறது
நம் சின்னச் சின்ன
சண்டைகளுக்குப் பின்
நீடிக்கும்
நீண்ட மௌனம்//

அப்புறம் இந்தக் கவிதையும் அழகு..
அன்புடன் அருணா

இரசிகை said...

:)