Wednesday, October 29, 2008

மழை

நீ இல்லாத
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...

**********

நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...

**********

மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்


************

நீ இல்லாத
தனிமைத் துயரை
மேலும் அதிகரித்தது
இந்தப் பாழாய்ப் போன
மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....

8 comments:

Balaji said...

மழை கவிதைகள் அருமை நண்பா! மனம் குளிர்கிறது உங்கள் கவிதைகளை வாசிக்கும் பொழுது!மழையின் மணம் வருகிறது! வாழ்த்துக்கள்!

Pramoth said...

Hi Charles,

Nice one da...U made me float

Rgds
Pramoth.U

ஜே கே | J K said...

நல்லா இருக்கு மாப்பி.

ஜே கே | J K said...

//மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்
//

சூப்பர்...

Anonymous said...

hai charles........

asatharada super a iruku koodaikaala mazaiyil nanaindha sugam un kavidaigalil.

அன்புடன் அருணா said...

//மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....//

ம்ம்ம் ...மழை..
எப்போதும் அழகு..இங்கேயும் ரொம்ப அழகு.
அன்புடன் அருணா

ச.பிரேம்குமார் said...

காதலும் மழையும் இணைபிரியா ஜோடி..

அழகான கவிதைகள் சார்லஸ்.

இரசிகை said...

mazhai moththamum ungal kavithai vaasam.. thooool!