Thursday, October 08, 2009

நீளும் நாட்கள்

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

7 comments:

அகமது சுபைர் said...

கிடைக்குற கரத்தை பிடிச்சுக்கிட்டு மேல ஏறி வா...

உலகம் ரொம்பப் பெரிசு..

Unknown said...

அன்பின் சார்லஸ் இந்த கவிதை ஈழ மக்களின் வேதனையை பிரதிபலிக்கிறது.

Unknown said...

Anna,

Intha Kavithai padikum pothu kannil kaneer vanthathu. Nenjai thotta oru kavithai anna.

Unknown said...

இது க‌விதை அல்ல‌

ஏழைகளின் வாழ்க்கை

Unknown said...

yelaikal yelakalave irukkum avalam

eniyavathu maruma

இரசிகை said...

aacharyak kuri...yin arththam,
yennul aacharyaththai varavazhaiththathu yenbathu mattume..:)

ithey pola oru pulambal kavithai yenttaiyum undu..
athey saayal ithil... athuvum aachcharyaththai varavazhaiththathu..

vaazhthukal...:)

விஜய் said...

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.