Tuesday, February 16, 2021
இலவச ஆங்கில கிண்டில் புத்தகங்கள் - 16-02-21
இலவச கிண்டில் புத்தகங்கள் - 16-02-21
அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.
குறிஞ்சித் தேன் (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08S2W57JL/ref=cm_sw_r_u_apa_1X8YD0C7AJS8AVFWVWT2
இடும்பாவனம் கார்த்தி - தமிழ்க்கேள்வி நேர்காணல் - சித்தாந்த வடை
Monday, February 15, 2021
IIT Krishnamurthy - என் பார்வை.
இலவச கிண்டில் புத்தகங்கள் - 15-02-21
அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.
அந்தர மனிதர்கள்: பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்களின் கதைகள்! (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08F8Q1YZL/ref=cm_sw_r_u_apa_68MJBGZM72PRSNR0H61Q
Saturday, February 13, 2021
இலவச கிண்டில் புத்தகங்கள் - 13-02-21
அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.
வேரோட்டம் / Verottam (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08TCBKVXQ/ref=cm_sw_r_u_apa_9Q32994ZA35PKY3BAEQZ
புதிய பொலிவு (குறுநாவல்) (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08GXYSDY9/ref=cm_sw_r_u_apa_JBT87EJB1QCNH7JB0V4R
அறிஞர் அண்ணாவின் பிடிசாம்பல் (குறுநாவல்) : [Pidi Sambal] (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08HD1TZGX/ref=cm_sw_r_u_apa_50K4QTA8740CGA2ET500
சந்திரோதயம் (நாடகம்) (Tamil Edition)
https://www.amazon.in/dp/B08GMCC6ZZ/ref=cm_sw_r_u_apa_V59ASTA5PG9TZNKJVEXJ
Thursday, February 11, 2021
Tej I love you - மரண மொக்கையின் இன்னொரு வடிவம்
இப்படி ஒரு மொக்கையான படத்த நடிக்க எப்படி ஒத்துக்குறானுங்கன்னு தான் புரியல. நேத்து சாயந்தரம் பொழுது போகல, கொஞ்சம் படம் பாக்கலாமேன்னு நெனச்சு இதை எடுத்தேன். அனுபமா வேற நடிச்சிருக்காங்க. கொஞ்சம் பாக்கலாமேன்னு நெனச்சது தப்பா போச்சு.
படம் ஆரம்பிச்சதுல இருந்து படம் அவ்ளோ செயற்கையா போகுது. அந்த கதாநாயகன சின்னப்பையனா இருக்கும் போது குடும்பமே கொண்டாடும். காரணமே கிடையாது. அவன் சந்தர்ப்ப வசத்தால் கொலை செஞ்சுட்டு சின்ன வயசுலேயே சிறார் பள்ளிக்கு போறான். யாரைக் காப்பாற்ற கொலை செஞ்சானோ அந்த பெண்ணின் கனவன் எதிர்பாத்த மாதிரியே நடந்துக்குறான். ஒவ்வொரு சீனும் இப்படித்தான் அடுத்து நடக்கப் போகுதுனு ரொம்ப சுலபமா பாக்குற எல்லோருமே யூகிச்சிட முடியுது. அப்படியே ஓட்டி ஓட்டி பாத்து தான் படத்த முடிச்சேன்.
தெலுங்கு படம் நான் பாக்குறதுக்கு காரணமே அதுல ஆக்ஷன், காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்னு எல்லாமே கடந்து கட்டி இருக்கும்னு தான். தெலுங்கு படங்கள் எப்பவுமே என்னை disappoint ஆக வச்சதே இல்ல. ஆனா நான் செம்ம மொக்கடான்னு நெனக்க வச்ச படம் இது தான். எப்படி இப்படி நடிக்க ஒத்துக்கிட்டானுங்கன்னு தான் நான் பல சீன் பாக்கும் போது நெனச்சேன்.
Sunday, June 21, 2020
யாரெல்லாம் வெற்றியாளன்?
Thursday, May 31, 2018
மங்களூர் பயணம் - உணவுக்கதை...
- Their fish
- Ice cream!
Wednesday, November 08, 2017
பொருளாதார சீரழிப்பு நாள் - நவம்பர் 8
Tuesday, April 25, 2017
நீயும் நானும்-3
Saturday, April 08, 2017
சுவை - HMT, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்.
Saturday, March 29, 2014
நான்....
சமூகத்திற்கு கருத்து சொல்ல நான் பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லை. மாதா மாதம் குடும்பம் நடத்த அல்லல்படும், பெரிதாக கனவுகளைச் சுமந்து ஓடும் சாதாரண common man நான்... அரசியல் நிகழ்வுகளும் நான் தினம் தினம் சந்திக்கும் மனிதர்கள் இந்த தேசத்தின் மீதும், மனிதர்கள் மீதான நம்பிக்கைகளையும் சிதைத்துக் கொண்டே இருக்கின்றன...
அரசியல், சமூகம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள், சாதிய அடக்குமுறை சார்ந்த மனப்பான்மை, பெண் மீதான psychological attack போன்றவை இந்த வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கைகளையும், எதிர்காலம் சார்ந்த பயத்தையும் தோற்றுவிக்கின்றன... அவ்வப்போது அப்படியெல்லாம் இல்லை.. இதுவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாதது.. எல்லாம் மாறும் என்ற நினைப்பிலேயே கடந்து செல்கிறேன்... மாற்றம் வருமா?
Tuesday, October 30, 2012
The Happening
The Happening

வழக்கமா நான் இந்த திரில்லர் படங்கள் பார்ப்பது இல்லை... ஒரே மாதிரியான காட்சி அமைப்பு எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை போன்றவை தான் காரணங்கள்... அதிலும் குறிப்பாக பாம்பு, முதலை, சுறா தாக்குவது மாதிரியான படங்கள் அலர்ஜி... அவர்கள் சீரியஸாக காட்ட நினைக்கும் காட்சிகளை கொட்டாவி விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இன்று பார்த்த The Happening மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய படம், எனக்கு பிடித்த Mark Wahlberg நடித்திருக்கிறார். முதல் காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை டக்கென்று எகிற வைத்துவிட்டது. சிலபல காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், அடுத்து என்னவென்று ஒரு ஆர்வத்தை உருவாக்கி இருந்தது படம். ஒரு காட்சி அப்படியே டக்கென்று பயமுறுத்திவிட்டது... பாக்கலாம்.. பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும். பார்க்கலாம்...
இந்தப் படத்தையும் நான் http://www.yify-torrents.com/ ல் இருந்து தான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்....
Wednesday, October 24, 2012
The Vow
இந்தப்படத்தின் ஹீரோ Channing Tatum தான் நான் படம் பார்க்க முதல் காரணம், இவரை எனக்கு G.I. Joe, Dear John படங்களிலிருந்து ரொம்ப பிடிக்கும்.. இதில் ரொம்ப இயல்பான நடிப்பு. நான் ஆங்கிலப்படங்களைப் பார்ப்பதே அதனின் வசனங்களுக்காத்தான்.. ரொம்ப கூர்மையான வசனங்கள். படத்தின் எந்தவொரு இடத்திலும் போர் அடிப்பது போல் உணர்வே ஏற்படவில்லை.. அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு அர்த்தம்...
படத்தோட கதை, ஹீரோ ஹீரோயின் கணவன் மனைவி, இருவரும் காரில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்தில் மனைவிக்கு கடந்த 5 வருடத்தில் நடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன. கண்விழித்ததும் கணவனை யார் என்று தெரியவில்லை. தன் மனைவியை திரும்பப்பெற அந்தக் கணவன் செய்யும் முயற்சிகள் தான் படம்.. அழகான திரைக்கதை, சிறப்பான வசனங்கள்... கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று...
ஆனா படம் பாக்கும் போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் நினைவுகள் வராமல் இல்லை...
























