Wednesday, December 06, 2006

சொல்லாமல் விட்ட காதல்

ஒருமுறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட‌
என் காதலை...

-------------

ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்பதற்காகவே
கடந்து போகிறேன்
வழக்கம் போல்
நீ இல்லாமல்
வெறுமையாய் இருக்கிறது
உன் வீடு

---------------

அவ‌ள் என்
கவிதைக்கு
கையும் காலும்
முளைத்ததைப்
போல் இருந்தாள்

--------------

களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன‌

4 comments:

நந்தா said...

சார்லஸ். ரொம்ப நல்லா இருக்கு கவிதை....

//களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன‌ //

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......

சுந்தர் / Sundar said...

//உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட‌
என் காதலை...
//
அருமை ... வாழ்த்துக்கள் ... தொடரட்டும் உங்கள் "சொல்லாமல் விட்ட காதல்"

Anonymous said...

"சொல்லாமல் விட்ட காதல்"
இப்போதாவது சொன்னிர்களா???????

Unknown said...

களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன‌

Excellent..Super anna.alagana aasigal kavithakalai...Wow Anna