Tuesday, February 16, 2021

இலவச கிண்டில் புத்தகங்கள் - 16-02-21

அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.

குறிஞ்சித் தேன் (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08S2W57JL/ref=cm_sw_r_u_apa_1X8YD0C7AJS8AVFWVWT2

இடும்பாவனம் கார்த்தி - தமிழ்க்கேள்வி நேர்காணல் - சித்தாந்த வடை

 

இந்த இடும்பாவனம் கார்த்தி‌யின் தமிழ்க்கேள்வி நிகழ்ச்சி நேர்காணல் பாத்தேன்கொஞ்சம் கூட தான் பேசும் விஷயத்தில் தெளிவு இல்ல3 நிமிஷத்துக்கு முன்னாடி பேசினத மாத்தி பேசுறார். அடிப்படையில் திமுகவ எதிர்க்கனும். ஏன் எதிர்க்கனும்னா சுத்து சுத்துன்னு சுத்துறாப்ள. அதிமுகவ ஏன் எதிர்க்கலன்னா அதுக்கு ஒரு வடை🤦‍♂️


திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பது இல்லையே என்ற கேள்விக்கு. அதிமுகவுக்கு கொள்கைகளே இல்ல. திமுக மட்டும் தான் சித்தாந்தத்தோடு இருக்கு. அந்த சித்தாந்தத்துக்கும் எங்க சித்தாந்தத்துக்கும் தான் போட்டி. அதனால அது கூடத்தான் சண்டைன்னு சொன்னார், 5 நிமிஷம் கழிச்சு திமுகவுக்கு சித்தாந்தமே இல்ல, வேஷம் போடுதுன்னு சொல்றார்

ஜெயா ஒரு சாதாரண முதல்வர் அவரால என்ன செய்ய முடியும்னு பேசுற வாய், கலைஞர் ஈழப்போரில் சரியா நடந்துக்கல, கச்சத் தீவை தாரை வார்த்துட்டார்ன்னு சொல்லுது. ஒரு மாநில முதலமைச்சரால் எப்படி ஒரு தீவை கொடுக்க முடியும்னு யோசிக்க முடியல. எல்லாம் சரி பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்னு தீர்மானம் போட்ட சபாநாயகர் காளிமுத்து ஏன் நாம் தமிழர் சுவரொட்டிகளில் பிரபாகரனுக்கு சமமாக இடம் பிடித்திருக்கிறார் என்று கேட்டால், அவர் மொழிப்போரில் ஈடுபட்டார்ன்னு பதில் வருது. அந்த வாதம் சரியெனில் மொழிப்போர் தியாகிகள் எத்தனை பேரின் பெயர் அல்லது அவர்களது புகைப்படங்கள் அந்தச் சுவரொட்டிகளில் இருக்கிறது? காளிமுத்து படம் இடம்பெறுவது சீமானின் மாமனார் என்ற ஒற்றைத் தகுதியில் மட்டுமே என்பது தான் நிதர்சனம். 

எங்க கட்சியில தனிமனித துதிபாடுகள் இல்ல, நாங்க நபர்களை முன் வைக்கல, சித்தாந்தத்தை முன் வைக்கிறோம்னு சொல்றார். ஆனா சீமான் அண்ணன் சொல்றாப்ள நான் தான் கட்சி, நான் சொல்றவன் தான் வேட்பாளர் முடியும்னா இரு இல்லைன்னா கெளம்புன்னு சொல்றார். இது என்ன சித்தாந்தம்னு புரியல. சீமான் என்ற தனி மனிதரின் பொய்களும் அவரின் பேச்சுத் திறனும், திரைக்கதைத் திறனும் தான் நாம் தமிழர் கட்சிக்கு அடிப்படை. இந்த லட்சணத்துல தனிமனிதரை முன்னிறுத்தவில்லைன்னு எப்படி கொஞ்சம் கூட கூச்சப்படாம பொய் சொல்ல முடியுது? 

சீமானுக்கு முன்னாடியே புலிகளோடு தொடர்பில் இருந்து அவர்களோடு நெருக்கமாக பயணித்த கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் எல்லாம் தமிழர்களே இல்லை என்பதெல்லாம் என்ன மாதிரியான பைத்தியக்கார மனநிலை என்று புரியவில்லை. கேட்டால் அவர்களின் தற்போதைய நிலைப்பாடுகள் காரணமாவாம். அப்படிப் பார்த்தால் காளிமுத்துவின் கடைசிக் கால நிலைப்பாடு பிரபாகரனைத் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னது தான். ஆனால் அவர் விஷயத்தில் மட்டும் பழைய மொழிப்போர் காலத்துக்கு போயிடுறாரு கார்த்தி. 

சங்கிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை தம்பிகள்.

இன்னும் கொஞ்சம் செந்தில் நெருக்கி கேள்விகள் கேட்டிருந்தால் சார் திமுகவ எதிர்த்தா தான் Payment வரும். வேற என்ன பண்றதுன்னு சொல்லிருப்பாப்ள. 


Monday, February 15, 2021

IIT Krishnamurthy - என் பார்வை.

 

    வழக்கம் போல தெலுங்கு சினிமா தேடலின் பகுதியாக இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தோட synopsis படிச்சப்போ அடடே நல்லா இருக்கேன்னு தோணுச்சு. ஒரு 4-5 நாளா பாக்காலாம்னு நெனச்சு ஞாயிறு பாக்க வாய்ப்பு கிடைச்சுது. படம் ஆரம்பிச்சதுமே மொக்கைய ஆரம்பிச்சுடுறாங்க. அப்போவே சரி இது வேலைக்காகாதுன்னு மனசு சொல்லிடுச்சு. ஆனாலும் சரி ஆரம்பத்துல அப்படி இருக்கும். போகப் போக ஸ்பீடு ஏறும்னு நெனச்சு பாக்க ஆரம்பிச்சேன். நாங்க சொன்னோமாடா ஸ்பீடு ஏறும்னு இயக்குநர் சிறப்பான சம்பவம் பண்ணிட்டார். 




    Typical ன்னு சொல்றது கூட சரியா இருக்காது, அதுக்கும் மிகக் குறைவான Heroine அறிமுகம். காலேஜ் படம்னாலே லைப்ரரில விரல்களால் புக் தேடி ஒரு புத்தகம் எடுக்கும் போது அந்த கேப்ல ஹீரோயின் முகம் காட்டுற வழக்கத்த இதுலையும் தொடர்ந்திருக்காங்க. எல்லா தெலுங்கு சினிமா போலவும் இதுலேயும் ஒரு Penthouse அதுல ஹீரோ தங்க போறார். இது மாதிரி படத்துக்குனே Software Engineer காமெடியன். 

ஹீரோயின் ஏன் வராங்க, எதுக்கு வராங்கன்னு ஒன்னுமே புரியல. அந்த ஹீரோயின் வரும் போதெல்லாம் எப்போடா இந்த சீன் முடியும்னு காத்திருக்க வேண்டி இருக்கு. கல்லூரியில் படிக்கும் ஜாலியான ஹீரோயின் அல்லது ஹீரோன்னா உடனே கல்லூரி Professor அ கிண்டல் பண்ணிடனும்னு ரூல்ஸ் வச்சிருக்காங்க. ஒரு மொக்கை காலேஜ்ல கூட அவ்ளோ ஈசியா கிண்டல் பண்ணிட்டு கடந்து போயிட முடியாது. Internal marks ல வச்சு செய்வாங்க. இந்த டைரக்டர்ஸ்க்கும் ரியல் வேர்ல்ட்க்கும் கொஞ்சம் கூட கனெக்ட்டிவிட்டி இருக்க மாட்டேங்குது. 

படத்துல வர அந்த ACP டெரரான ஆள், நேர்மையான ஆள்ன்னு காட்ட இவ்ளோ மொக்கையான காட்சிகள் இருந்துருக்க வேணாம். கொஞ்சம் டீடெயிலிங் பண்ணிருக்கலாம். ஹீரோவோட calls அ monitor பண்ணும் போது அவர் ஹீரோயின் கூட பேசுற call அ ஹீரோவுக்கும் போட்டுக் காட்டுற சீன் 🤦‍♂️
இப்படித்தான் தலையில அடிச்சுக்குற மாதிரி இருந்துச்சு. அவரு ரொம்ப ஃப்ரெண்ட்லியாம். அந்தக் கருமத்துக்கு தான் அந்த சீன் வச்சிருக்காங்க. அப்படி என்னத்தான் சொல்ல வராங்க. எப்படித்தான் போகுதுன்னு பாப்போமேன்னு தான் அப்படி இப்படின்னு படத்த ஓட்டி ஓட்டிப் பார்த்து கடைசியா முடிச்சாச்சு. 

கடைசி டிவிஸ்ட் கொஞ்சம் சர்பிரைஸ். அது தான் படத்துல இண்ட்ரெஸ்டிங். ஆனா அந்த டிவிஸ்ட்டுக்கு அடுத்து வர 10 நிமிஷ டீடெயிலிங் அவசியமே இல்ல. அதுல பாதி சீன்ன வெட்டிருக்கலாம். மொத்த படமே ஒன்னே முக்கா மணி நேரம் தான். Crisp ஆ எடுத்தா அரை மணிநேரம் தான் தாங்கும். டைரக்டர் பத்தி இணையத்துல தேடிப்பாத்தா இது தான் அவருக்கு முதல் படம்னு சொல்லுது. அதனால ஒன்னும் சொல்ல முடியல. பெரிய டைரக்டர்னா இந்த synopsis க்கு புகுந்து விளையாடியிருப்பாங்கன்னு தோணுது.

Anyhow மொக்கையாக முடிந்த இன்னொரு தெலுங்கு சினிமா watching லிஸ்ட்ல இதுவும் சேந்துடுச்சு. 

இலவச கிண்டில் புத்தகங்கள் - 15-02-21

அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.


அந்தர மனிதர்கள்: பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை தங்கள் வாழ்க்கைப்பாடாகக் கொண்டவர்களின் கதைகள்! (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08F8Q1YZL/ref=cm_sw_r_u_apa_68MJBGZM72PRSNR0H61Q


Saturday, February 13, 2021

இலவச கிண்டில் புத்தகங்கள் - 13-02-21

 அமேசான் தளத்தில் இன்று இலவசமாகக் கிடைக்கும் முக்கிய நூல்களின் சுட்டிகள் கீழே உள்ளன. இலவசமாக தரவிறக்கி, அமேசான் கிண்டில் ஆப் மூலமாக படித்து பயன் பெறுக.


வேரோட்டம் / Verottam (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08TCBKVXQ/ref=cm_sw_r_u_apa_9Q32994ZA35PKY3BAEQZ


புதிய பொலிவு (குறுநாவல்) (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08GXYSDY9/ref=cm_sw_r_u_apa_JBT87EJB1QCNH7JB0V4R



அறிஞர் அண்ணாவின் பிடிசாம்பல் (குறுநாவல்) : [Pidi Sambal] (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08HD1TZGX/ref=cm_sw_r_u_apa_50K4QTA8740CGA2ET500



சந்திரோதயம் (நாடகம்) (Tamil Edition) 

https://www.amazon.in/dp/B08GMCC6ZZ/ref=cm_sw_r_u_apa_V59ASTA5PG9TZNKJVEXJ

Thursday, February 11, 2021

Tej I love you - மரண மொக்கையின் இன்னொரு வடிவம்


இப்படி ஒரு மொக்கையான படத்த நடிக்க எப்படி ஒத்துக்குறானுங்கன்னு தான் புரியல. நேத்து சாயந்தரம் பொழுது போகல, கொஞ்சம் படம் பாக்கலாமேன்னு நெனச்சு இதை எடுத்தேன். அனுபமா வேற நடிச்சிருக்காங்க. கொஞ்சம் பாக்கலாமேன்னு நெனச்சது தப்பா போச்சு. 

படம் ஆரம்பிச்சதுல இருந்து படம் அவ்ளோ செயற்கையா போகுது. அந்த கதாநாயகன சின்னப்பையனா இருக்கும் போது குடும்பமே கொண்டாடும். காரணமே கிடையாது. அவன் சந்தர்ப்ப வசத்தால் கொலை செஞ்சுட்டு சின்ன வயசுலேயே சிறார் பள்ளிக்கு போறான். யாரைக் காப்பாற்ற கொலை செஞ்சானோ அந்த பெண்ணின் கனவன் எதிர்பாத்த மாதிரியே நடந்துக்குறான். ஒவ்வொரு சீனும் இப்படித்தான் அடுத்து நடக்கப் போகுதுனு ரொம்ப சுலபமா பாக்குற எல்லோருமே யூகிச்சிட முடியுது. அப்படியே ஓட்டி ஓட்டி பாத்து தான் படத்த முடிச்சேன். 

தெலுங்கு படம் நான் பாக்குறதுக்கு காரணமே அதுல ஆக்‌ஷன், காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்னு எல்லாமே கடந்து கட்டி இருக்கும்னு தான். தெலுங்கு படங்கள் எப்பவுமே என்னை disappoint ஆக வச்சதே இல்ல. ஆனா நான் செம்ம மொக்கடான்னு நெனக்க வச்ச படம் இது தான். எப்படி இப்படி நடிக்க ஒத்துக்கிட்டானுங்கன்னு தான் நான் பல சீன் பாக்கும் போது நெனச்சேன். 

Sunday, June 21, 2020

யாரெல்லாம் வெற்றியாளன்?

            


            யாரெல்லாம் வெற்றியாளர் ஆக முடியும்? இந்தக் கேள்வி கேட்கப் படும் போது எல்லோரும் சொல்லும் பதில் எல்லோருமே ஆக முடியும் என்பது தான். ஆம் எல்லோருமே வெற்றியாளர்கள் ஆக முடியும். ஆனால், அதற்கான அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே.

            வெற்றி பெற்ற எல்லோருமே சில விஷயங்களின் ஒன்றுபடுவார்கள். அவர்களின் குண நலன்களை, அவர்களின் வெற்றிக்கான காரணிகளை அலசினால். அவர்களின் ஒரு சில பண்புகள் ஒத்துப் போவதைக் காண முடியும். 

            ஒருமுறை வாரன் பப்ஃபெட் மற்றும் பில்கேட்ஸ் இருவரையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் உங்கள் வெற்றிக்கான காரணியாக நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டார்கள். அவர்கள் இருவருமே சொன்ன பதில் Focus. தமிழில் இதை குவியம், குவிமையம் என்றெல்லாம் சொல்வார்கள், கொஞ்சம் மொழிபெயர்ப்பில் விட்டுக் கொடுத்தால் இதை கவனம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஒருமுகப் படுத்தப்பட்ட கவனம். குவிக்கப்பட்ட கவனம். செய்யும் செயலில் இருக்க வேண்டிய ஒருமுகப் படுத்தப் பட்ட கவனம். அது மட்டுமே உங்களை வெற்றியாளனாக ஆக்கும்.

Thursday, May 31, 2018

மங்களூர் பயணம் - உணவுக்கதை...





எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரின் முக்கிய சுற்றுலா பகுதிகளையும், அந்த ஊரின் சிறப்பான உணவு வகைகளையும் சுவைப்பது என்னுடைய பழக்கம். இந்த முறை மங்களூர் போக வேண்டும் என்று அலுவலகத்தில் சொன்னபோது அப்படி என்ன இருக்கிறது மங்களூரில் என்று தேட ஆரம்பித்தேன். வழக்கம் போல கூகுளாண்டவர் சிறப்பான உதவிகள் அருளினார். சில பல இணையத்தளங்கள், உதவியோடு முக்கியமான சிறப்பான உணவகங்களின் பட்டியல் தயாரானது.

மங்களூர் சென்று இறங்கிய போது, அப்படியே மலையாள வாடை வீசியது எங்கும், வீடுகள், இயற்கை என அற்புதம். பயிற்சி எடுக்கும் இடம் மங்களூரில் இருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. ஓலா புக் செய்தேன். டிரைவருக்கு அழைத்தேன், நான் பேசிய ஆங்கிலம் அவருக்கு புரியவில்லை, அவர் பேசிய துலு, கன்னடம் எனக்கு புரியவில்லை. எப்படியோ வரவழைத்து உள்ளே ஏறி அமர்ந்தால் தமிழ்ப்பாட்டு ஒலிக்கிறது. அண்ணே நீங்க தமிழா என்றேன். அவர் உற்சாகத்தோடு ஆமா சார் தூத்துக்குடி என்றார். அவர் பெயர் மதியழகன். ஸ்டெர்லைட், துப்பாக்கி சூடு என சிறிது நேரம் பேசி விட்டு பேச்சு அவர் பற்றியும் மங்களூர் பற்றியும் வந்தது. அவர் 18 ஆண்டுகளுக்கு முன் மங்களூர் வந்தார். அவர் மங்களூர் பெருமைகள் சொல்லச் சொல்ல பேசாமல் மங்களூரில் செட்டில் ஆகிடாலாமே என்ற எண்ணம் வந்து விட்டது.

பேச்சு நமக்கு பிடித்த உணவுகள் நோக்கித் திரும்பியது. மீன் இல்லாம எனக்கு சாப்பாடே எறங்காது சார் என்றவரை நம்ம இனம் சார் நீங்க என்று கட்டித்தழுவாத குறை. எங்கே என்ன சாப்பிடலாம் என்று விசாரித்துக் கொண்டு பயிற்சி இடத்துக்கு சென்று விட்டோம். மங்களூரின் சிறப்பு மீன். திரும்பிய இடம் எல்லாம் வகை வகையாய் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஊர் அப்படியொரு சுத்தம். ஒரு சினிமா அல்லது அரசியல் சார்ந்த போஸ்டரை பார்க்க முடியவில்லை.

ஞாயிறு பயிற்சி முடிந்து இரவு தங்குமிடத்துக்கு வந்த போது உணவு வேட்டை ஆரம்பித்தது. மூன்று முக்கியமான மீன் உணவகங்கள் இருக்கின்றன. அதில் முதல் இடம் மச்சலிக்கு…

1)     மச்சலி, (Machali Restaurant)



இங்கே வவ்வால், வஞ்சிரம் என ஆரம்பித்து ஏகப்பட்ட மீன் வகைகள், எல்லா பேரையும் துலுவில் எழுதி வைத்திருக்கிறார்கள். மதியழகன் உதவியோடு முதல் நாள் இரவுக்கு Koddai(இதுக்கு தமிழில் என்ன மீன் என்று தேடினேன், கிடைக்கவில்லை) என்ற மீனும், கணவாய் அல்லது கடம்பா என சொல்லப்படுகின்ற Squid ம் வாங்கினோம், Squid Ghee roast. ருசி அப்படியொரு ருசி. இங்கே எப்போதும் மீல்ஸ் மற்றும் மீன், நண்டு, இறால் வகைகள் கிடைக்கும். தோசை முதலிய டிபன் வகைகள் இல்லை.
மறுநாள் மதியமும் மச்சலியிலேயே ஆஜர். இப்போது மீல்ஸோடு வவ்வாலும், அதே Koddai யும், டிரைவர் மிகவும் உயர்வாகச் சொன்னதால் சிக்கன் மசாலாவும் வாங்கினோம். ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அளவு அப்படியொரு ருசி, வவ்வால் மற்றும் வஞ்சிரம் மட்டுமே விலை மிக உயர்வு, மற்ற அனைத்தும் கொடுக்கும் விலையை விட அதிகமாகவே உண்ட திருப்தி. அனைத்தும் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்டது, தேங்காயின் சுவை நன்றாகவே தெரிந்தது.





உணவகம் மிகச் சிறியது. கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கிறது, பார்சல் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதியழகன் சொன்னார் இங்கே இருக்கும் உணவகங்களில் இது தான் மிகவும் சுத்தமாக இருக்கும், கூட்டத்துக்கு குறைவே இருக்காது என்று. 

முக்கியமான ஒரு விஷயம் சிறிய அசைவ உணவகங்கள் செல்லும் போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அங்கே அடிக்கும் கவுச்சி வாடை. என்னைக் கேட்டால் வாசனை என்று சொல்வேன். மற்றவர்களுக்கு வாடை. இங்கே கொஞ்சம் கூட அந்த வாடை இல்லை. உணவின் மணம் வீசும்.

2)     கிரிமஞ்சாஸ்(GiriManjas Restaurant)



கிரிமஞ்சாஸுக்கு இரண்டாவது இடம் கொடுப்பேன். மிகச் சிறிய இடம், மச்சலி மாதிரியே மீல்ஸ் மற்றும் உணவு வகைகள், விலை சற்றேறக்குறைய அதே. ருசி அற்புதம். இம்முறை மீல்ஸ் வேண்டாம் என்று சொல்லி விட்டு மீனில் மட்டும் கவனம் செலுத்தினோம். இம்முறை ’முரு’ என்ற மீனும், கணவாய் ghee roast இல்லாத காரணத்தால் ஃப்ரை வாங்கினோம், சும்மா சொல்லக்கூடாது, ருசி அதே போல அருமை. அதை முடிச்சதும், Prawn masala, பச்சை நிறத்தில் மசாலா, நல்லா இருக்குமா இருக்காதான்னு சந்தேகத்தோட சாப்பிட ஆரம்பிச்சேன், கொஞ்சம் கூட மசாலா மிச்சம் வைக்கப்படாமல் சாப்பிட்டு முடிக்கப்பட்டது, அடுத்து என்னன்னு யோசிச்சப்போ மறுபடி ஒரு ’முரு’ மீன் சொல்லி சாப்பிட்டு திருப்தியா வயிறு நிரம்பின உணர்வோட எழுந்தோம். அப்போ அங்கே சிறப்பு குளிர்பானம் என ஒன்றைக் கொடுத்தார் வெள்ளை நிறத்தில். என்னவென்று கேட்டால், இளநீரும், எலுமிச்சையும் கலந்தது என்றார். எனக்கு இரண்டுமே பிடிக்கும். எப்படி விடுவது. குடித்தாயிற்று. அது தனி ருசி.






3)     நாராயணா உணவகம்(Narayana Restaurant)



நாராயணாவுக்கு நான் மூன்றாவது இடமே கொடுப்பேன். நான் சென்ற இரவு, கேட்ட எதுவுமே இல்லை. வஞ்சிரம் மற்றும் மத்தி பிறகு ஏதோ ஒரு மீன். அது மட்டுமே இருந்தது. என்னோடு வந்திருந்த என் அலுவலக நண்பருக்கு வஞ்சிரம் மிகவும் பிடித்திருந்தது வஞ்சிரத்தோடு அதன் மசாலா மிகவும் பிடித்து விட்டது. அந்த மசாலா செய்யும் முறை பற்றி எவ்வளவோ கேட்டும் சொல்ல மறுத்து விட்டார். ரகசியம் என்று சொல்லிவிட்டார்.



ரம்ஜான் காலத்து மட்டன், சிக்கன் சமோசக்கள் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. ருசி சுமார் தான். மழை அதிகமாக இருந்ததால் பெரிதாக வெளியே சென்று மற்ற கடைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றுமொரு ஆச்சர்யம் ஷவர்மா. Falnir பகுதியில் Chilly Lemon என்ற கடையில் நம் ஊரில் குறிப்பாக சென்னையில் 60-70 ரூபாய்க்கு விற்கும் அதே ஷவர்மா அளவில் அங்கே இரண்டு ஷவர்மா சாப்பிட முடிந்தது. அருமையான சுவை. இங்கே தான் மட்டன் சிக்கன் சமோசாக்கள் சாப்பிட்டேன், உருளைக்கிழங்கு மசாலா அதிகமாக இருந்ததால் எனக்கு பிடிக்க வில்லை.



முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன். ஐஸ்கிரீம். மதியழகன் என்னிடம் சவால் விட்டார் உங்க ஊர் அருண் ஐஸ்கிரீமில் இல்லாத சுவையை நான் இங்கே ஒரு கடையில் கொடுக்க முடியும், முக்கியமா சளி பிடிக்காது என்றார். என்னடா அதிசயம் என்று நினைத்து அவருடன் சென்ற ஐஸ்கிரீம் கடை பப்பாஸ்(Pabbas). 



மிகப்பெரிய கடை. ஒரு ரெஸ்டாரண்ட் போல இருந்தது. சாதாரண விலை. ஐஸ்கிரீம் அவ்வளவு சுவை. Really enjoyed. சாக்கலேட் பீட்சா, தில்குஷ், அப்புறம் இன்னும் சில வகைகள் சாப்பிட்டு முடித்தோம்.




இன்னொரு மங்களூர் சிறப்பு மங்களூர் பன்(Mangalore Buns), அதையும் ஒரு கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு தேங்காய் சட்னி. ஆவ்சம்…



எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.

There are 2 things that Mangalorians take very seriously –
  1. Their fish
  2. Ice cream!
இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

Wednesday, November 08, 2017

பொருளாதார சீரழிப்பு நாள் - நவம்பர் 8


அப்போது நான் நெல்லூரில் அலுவல் நிமித்தமாக சென்றிருந்தேன். என்னோடு என் அலுவல பணியாளர்கள் இருவரும் வந்திருந்தனர். இரவு உணவருந்திவிட்டு சாவகாசமாக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பேசி முடித்துவிட்டு உறங்கப் போகலாம் அன்று நினைக்கையில் அலைப்பேசியில் குறுஞ்செய்திகள் வந்திருக்கிறதா என்று பார்க்கலாம் என்று எடுத்தால் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட தகவல்கள், எல்லாம் ஒரே விஷயத்தைப் பேசின. மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏடிஎம் கள் செயல்படாது.

பர்ஸை திறந்து பார்த்தால் கையில் இருப்பது வெறும் முன்னூறு ரூபாய்கள். எங்கள் மூவருக்குமான உணவுக்கான பணம் அது. அடுத்து ஏடிஎம் எப்போது திறக்குமோ அது வரை அந்த முன்னூறு ரூபாய்களை மட்டுமே வைத்துக்கொண்டு உணவருந்த வேண்டும். தெரியாத மொழி, பழக்கமில்லாத மனிதர்கள், புதிய இடம் என திக்குத் தெரியாமல் நின்றிருந்தோம். அடுத்த ஒரு மாதம் உணவுக்கும், பயணத்துக்கும் பணத்துக்காக ஏடிஎம். ஏடிஎம்மாக அலைந்தது, பட்டினி கிடந்தது எல்லாம் சொல்லி மாளாது.

கக்கத்தில் காசு வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் ஊருக்கு உபதேசிக்கலாம், ஆனால் தெருவில் அலைந்தால் தான் உண்மை புரியும். அந்த ஒரு மாதம் நான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் துன்பங்கள், மோடிக்கும் இந்த அரசுக்கும் விட்ட சாபங்கள், எதுவுமே சாதாரணமாக கடந்து போகக்கூடியது அல்ல.

Saturday, April 08, 2017

சுவை - HMT, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்.

கோவையின் சிறப்பம்சங்களில் ஒன்று HMR - H முத்து ராவுத்தர் பிரியாணிக் கடை. அவர்களின் ஆரம்பக் கடை ஆத்துப்பாலம் பகுதியில் இருந்தாலும் இன்று ஆர். எஸ்.புரம் பகுதிக்கே போக முடிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் காத்திருந்து பிறகே இடம் கிடைத்தது. 

மெனு கார்டை பார்க்கும் வரை பர்ஸுக்கு இது ஏற்ற இடம் தானா என்று ஒரு புறம் மனசு கேட்டுக்கொண்டே இருந்தது. 




இதோ அந்த மெனு கார்ட். தம்மாத்தூண்டு பிரியாணிய கொண்டு வந்து வச்சு 300 ரூபாய் கேட்கும் கடைகளுக்கு மத்தியில் இந்தக் கடை மிக அருமை. என்னோடு வந்தவருக்கு பாசுமதி பிரியாணி பிடிக்கும், எனக்கு ஜீரக சம்பா தான். அவர் பிரியாணியைப் பாத்ததுமே என்ன இது எனக்கு வேணாம் பாஸ், செம்ம பசி இப்படி ஆச்சே என புலம்பிய படியே பிரியாணியை வாயில் வைத்தவர். ஒரு வார்த்தை பேச வில்லை பிறகு. அப்படி ஒரு சுவை.

ரொம்ப நாள் கழிச்சு அட்டகாசமான பிரியாணி. பீப் பிரியாணிக்கு தான் HMT ரொம்ப பிரபலம். ஆனா இந்த மெனு கார்டில் பீப் பிரியாணி இடம் பெறவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றம். வேலை பார்ப்பவரிடம் பீப் பிரியாணி இல்லையா எனக் கேட்டதும் இருக்கே எனக் கொண்டு வந்தார். ஏன் இடம் பெறவில்லை என்பது பெரிதாக இன்னும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒரு 10 நிமிட தாமதத்தை பொறுத்துக் கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் சுவையான பிரியாணி நியாயமான விலையில் உங்களுக்கு கிடைக்கும்.

கோவை வரும் உணவுப் பிரியர்கள் தவற விடக்கூடாத இடம்....

Saturday, March 29, 2014

நான்....

பேஸ்புக் வந்ததில் இருந்து பெரிதாக ஒன்றும் வலைப்பக்கத்தில் எழுதுவது இல்லை.. அவ்வப்போது தோன்றும் கருத்துகளை அதிலேயே பதிந்து விடுவதால் வலைப்பக்கத்தில் எழுதமுடிவதில்லை.. ஆனாலும் மனதின் ஓரத்தில் வலைப்பக்கத்தில் எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருக்கிறது... மறுபடியும் எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் இப்போது இங்கே....

சமூகத்திற்கு கருத்து சொல்ல நான் பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லை. மாதா மாதம் குடும்பம் நடத்த அல்லல்படும், பெரிதாக கனவுகளைச் சுமந்து ஓடும் சாதாரண common man நான்... அரசியல் நிகழ்வுகளும் நான் தினம் தினம் சந்திக்கும் மனிதர்கள் இந்த தேசத்தின் மீதும், மனிதர்கள் மீதான நம்பிக்கைகளையும் சிதைத்துக் கொண்டே இருக்கின்றன...

அரசியல், சமூகம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள், சாதிய அடக்குமுறை சார்ந்த மனப்பான்மை, பெண் மீதான psychological attack போன்றவை இந்த வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கைகளையும்,  எதிர்காலம் சார்ந்த பயத்தையும் தோற்றுவிக்கின்றன... அவ்வப்போது அப்படியெல்லாம் இல்லை.. இதுவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாதது.. எல்லாம் மாறும் என்ற நினைப்பிலேயே கடந்து செல்கிறேன்... மாற்றம் வருமா?

Tuesday, October 30, 2012

The Happening


The Happening














வழக்கமா நான் இந்த திரில்லர் படங்கள் பார்ப்பது இல்லை... ஒரே மாதிரியான காட்சி அமைப்பு எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை போன்றவை தான் காரணங்கள்... அதிலும் குறிப்பாக பாம்பு, முதலை, சுறா தாக்குவது மாதிரியான படங்கள் அலர்ஜி... அவர்கள் சீரியஸாக காட்ட நினைக்கும் காட்சிகளை கொட்டாவி விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று பார்த்த The Happening மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய படம், எனக்கு பிடித்த Mark Wahlberg நடித்திருக்கிறார். முதல் காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை டக்கென்று எகிற வைத்துவிட்டது. சிலபல காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், அடுத்து என்னவென்று ஒரு ஆர்வத்தை உருவாக்கி இருந்தது படம். ஒரு காட்சி அப்படியே டக்கென்று பயமுறுத்திவிட்டது... பாக்கலாம்.. பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும். பார்க்கலாம்...

இந்தப் படத்தையும் நான் http://www.yify-torrents.com/ ல் இருந்து தான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்....


Wednesday, October 24, 2012

The Vow

The Vow...

இப்போ எல்லாம் படங்களை http://www.yify-torrents.com/ தான் தரவிறக்கம் செய்கிறேன். கிடைக்கும் torrents எல்லாமே நல்ல தெளிவா, subtitles கூட கிடைக்குது. எக்கச்சக்கமா படங்களை தரவிறக்கம் செஞ்சு பாக்கமலேயே இருந்தேன். இப்போ எல்லாம் Action, Science fiction படங்கள் தான் அதிகமா பாக்குறேன்.. அதனால இந்தப்படத்தை தரவிறக்கம் செஞ்சு அப்படியே வச்சிருந்தேன்.. லேசா ஓட்டிப் பாக்கும் போது Romantic Movie மாதிரி இருந்துச்சு.. நான் எப்போதுமே படங்களை தனியா இருக்கும் போது தான் பார்ப்பேன். இல்லைன்னா நம்மளை நிம்மதியா படம் பாக்கவே விட மாத்தானுங்க... அப்போதான் வந்து அது என்ன, இது என்ன இம்சை பண்ணுவானுங்க...

இந்தப்படத்தின் ஹீரோ Channing Tatum தான் நான் படம் பார்க்க முதல் காரணம், இவரை எனக்கு G.I. Joe, Dear John படங்களிலிருந்து ரொம்ப பிடிக்கும்.. இதில் ரொம்ப இயல்பான நடிப்பு. நான் ஆங்கிலப்படங்களைப் பார்ப்பதே அதனின் வசனங்களுக்காத்தான்.. ரொம்ப கூர்மையான வசனங்கள். படத்தின் எந்தவொரு இடத்திலும் போர் அடிப்பது போல் உணர்வே ஏற்படவில்லை.. அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு அர்த்தம்...

படத்தோட கதை, ஹீரோ ஹீரோயின் கணவன் மனைவி,  இருவரும் காரில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்தில் மனைவிக்கு கடந்த 5 வருடத்தில் நடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன. கண்விழித்ததும் கணவனை யார் என்று தெரியவில்லை. தன் மனைவியை திரும்பப்பெற அந்தக் கணவன் செய்யும் முயற்சிகள் தான் படம்.. அழகான திரைக்கதை, சிறப்பான வசனங்கள்... கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று...

ஆனா படம் பாக்கும் போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் நினைவுகள் வராமல் இல்லை...

Sunday, October 21, 2012

பெயரிடப்படாதவை - 2





நிறைய காற்று
நிறைய புழுதி
கொஞ்சம் மழை
இன்னும் கொஞ்சம் மழை
நிறைய மழை
பாவங்கள் கழுவி
ஓடும் மழை....
நிறைய மழை....

பெயரிடப்படாதவை....




கான்கிரீட் சாலைகளில்
காணாமல் போனவைகளில்
கடைசியாய்
செந்நிற மழை நீர்..

Tuesday, May 22, 2012

+2


இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாயின... நாமக்கல் பகுதி மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்... இது வெற்றிச்செய்தி போல கொண்டாடப்படுகிறது, நான் நாமக்கல் வழி சேலம் செல்லும் போதெல்லாம் அங்கே புற்றீசல் போல இருக்கும் பள்ளிகளைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன், ராசிபுரம் அதற்கும் மேலே... அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக நான் அனுதாபப் படுகிறேன்... நீங்கள் மாணவர்களை, நல்ல சந்ததியினரை உருவாக்கவில்லை பள்ளிகளே... இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள். பணம் கொட்டும் இயந்திரங்களை. மனிதத்தன்மையற்ற, சுயநலம் மிக்க, ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறீர்கள். வாழ்க உங்கள் சேவை...

Friday, December 30, 2011

Inception

தஞ்சாவூர் வந்த பின்னாடி மருத்துவ சிகிச்சை ,எப்போதும் படுக்கை வாசம், ரொம்ப போர் அடிக்கிதுன்னு படம் தரவிறக்கி பாக்கலாம்னு தோணுச்சு. சென்ற ஆண்டு வந்த திரைப்படங்களை விக்கிபீடியாவில் தேடி அதுல பிடிச்ச டைட்டில செலக்ட் பண்ணி தரவிறக்கினேன்... அப்படி கிடைச்ச படம்தான் Inception.

எனக்கு Leonardo DiCaprio வ ரொம்பவே பிடிக்கும். அவரோட Blood Diamond படம் அற்புதமா இருக்கும்... படத்துல அற்புதமான நடிப்புல பின்னி இருந்தார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செஉது அற்புதமாக நடிக்கும் சிறந்த நடிகர். 


மனிதனின் கனவு, அதில் விதைக்கப்படும் Idea, கனவுலகம் கட்டியமைக்கப்படுதல்ன்னு ரொம்ப சுவாரசியமான திரைக்கதை... நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற திரைப்படம்..

http://www.imdb.com/title/tt1375666/

சினிமா....

உலக சினிமா பாத்து கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்ல... என்னோட இணைய மையத்துல இருக்கும் போது பொழுது போகலைன்னா Torrent ல Action, Adventure, Romance, Animation, Sci-Fi படங்கள் பாக்குற சாதாரண ஆள் தான் நான்...

அப்படி பாக்குற படங்களை பத்தி இங்க எழுதலாம்னு தோணுச்சு... அதை செய்ய போறேன்... thats it...

Wednesday, October 27, 2010

காலமும் நீயும்

உன்னைப்பற்றி எழும் உணர்வுகளை
காலம் தன்வசம்
உள்ளிழுத்துக் கொள்கிறது
காலத்திடம் சண்டையிடும்
திறமில்லை எனக்கு...
கடந்து செல்லும் நாட்களை
இழுத்து பிடித்து நிறுத்தும்
வலிமையில்லை எனக்கு...
மௌனித்திருக்கிறேன்
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி