Wednesday, December 06, 2006

நம் தேசம்

தீர்ப்பு

இங்கே தீர்ப்புகள்
முடிவு செய்யப்பட்ட
பின்பே
வழக்குகள்
விசாரிக்கப்படுவதால்
உண்மை இங்கே
பர்தா போட்டுக் கொள்கிறது

சுதந்திர இந்தியா?


சுதந்திர இந்தியாவாம்
யார் சொன்னது?

இங்கே

கனவுகள் கூட‌
திருடப்படுகின்றன‌
மொட்டுக்க‌ள் கூட‌
க‌ருகி விடுகின்ற‌ன‌

எங்க‌ள் க‌ண்ணீர்
முத‌லாளிக‌ளுக்கு
ப‌ன்னீராய் தெளிக்க‌ப்ப‌டுகிற‌து.

நாங்க‌ள்
என்றும் அக‌திக‌ளாக‌
எங்க‌ள் நாட்டிலேயே

இங்கே

ஏழைக‌ளின் ஆடைக‌ளுக்கே
சுதந்திரம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

எங்க‌ள் சிதைக்கு
தீ மூட்டி விட்டு
சுகமாய் குளிர்காய்கிறார்க‌ள்
எங்க‌ள்
அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள்

உறைப‌னி கூட‌
கொழுந்துவிட்டெரியும்
எங்க‌ள் அவ‌ல‌ங்க‌ளை
கேட்டால்

ஆனால்
இந்த அவலங்களுக்கு
நாங்கள் தான்
காரண கர்த்தாக்கள்

சாதிகள் கண்டுபிடித்து
மோதல்கள் கொண்டோம்
சமய‌ங்கள் பெயரைச் சொல்லி
ச‌ழக்குகள் கொண்டோம்

ம‌த‌த்தின் பெயரால்
ம‌னித‌நேய‌ம் தொலைத்தோம்
சாதியின் பெய‌ரால்
ச‌ண்டையிட்டுக் கொண்டோம்

ம‌த‌த்திற்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று ம‌னித‌நேய‌க்
கொடி பிடிக்க‌ப்போகிறோம்?
சாதிக்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று சாதிக்க‌ப்போகிறோம்

இந்தியத் தாயே
எங்களுக்கு நீ
மகாத்மாக்களை தர வேண்டாம்
நல்ல மனிதனையாவது தா.....

------

நெருப்பு

இந்த‌ச்
சமூக அவலங்களை
சுட்டுப் பொசுக்க‌
கொஞ்சம்
நெருப்பு வேண்டும்
என் விழிகளுக்கு

3 comments:

Unknown said...

மிக அருமையான கவிதைகள் தோழரே...

இந்திய சமூகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பு ஒரு பொறுப்பு.
இந்தியா என்ற பெயரில் நம் தமிழ் சமூகம் படும் பாடு எல்லையற்றவை.

நம் மக்கள் அங்கே ஈழத்தில் படுகொலை செய்த அதிபருக்கு இங்கே சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிற அவலம்..

நாம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறோம் தோழரே...

இதற்கான விடியலை நோக்கி தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்..

தங்கள் கவிதைகள் மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன்.....

தோழமையுடன்

க.அருணபாரதி

jeya said...

HATS OF U CHARLES CONTINUE IT

Unknown said...

சமூகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் பொறுப்பு எல்லையற்றது
தங்கள் கவிதைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது
விடியலை எதிர் நோக்கி நாம்.............