எதற்கெடுத்தாலும் அரசாங்கம் சரியில்ல, அரசாங்கம் சரியில்லனு சொல்றோமே, நாம எந்தெந்த விதத்துல சரியா இருக்கோம்னு நாம கொஞ்சம் நினைச்சு பார்த்ததுண்டா? பொது இடத்துல குப்பை போடுறது( பேருந்து பயணச்சீட்டாக இருந்தாலும் அதுவும் குப்பை தான்), எச்சில் துப்புறது ஆரம்பிச்சு.... பொது பிரச்சனை வரைக்கும் எதுல நாம ஒழுங்கா இருக்கோம்.
நம்மகிட்ட இருக்குற ஒருசில பிரச்சனைகளையும் கொஞ்சம் பார்ப்போமே..
நாமெல்லாம் எந்தப்பிரச்சனையிலும் பங்கெடுக்க முயற்சிப்பதில்லை, சமூக பிரச்சனைகளை நினைத்து கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தயாராய் இருக்கும் நாம் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயாரா? ரொம்ப வேண்டாங்க, இப்போ அணு ஆயுத ஒப்பந்தம் அமெரிக்காகிட்ட போட்டோமே நம்ம நாட்டின் எதிர்கால அணுத் திட்டங்களை அடகு வைக்கிறோம், நம்மள்ல எத்தனை பேருக்கு அது பத்தின முழு விவரமும் தெரியும், மேற்கு வங்காளத்துல நடந்துகிட்டு இருக்குற அந்த சிங்கூர் பிரச்சனை எத்துனை பேருக்கு தெரியும், கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசினோமே பெரியார் அணை விவகாரம் அது என்ன ஆச்சுன்னு யாராவது கவலைப்பட்டோமா?, நர்மதை அணை விவகாரம் பற்றி யாராவது சிந்திக்கிறோமா?, நதிகளை இணைக்கனும்னு பெருசா பேட்டி கொடுக்குற அரசியல்வாதிகளுக்கு அதனால் எத்தனை கோடி பேர் வீடுகளை இழந்து, வாழ்வியல் ஆதாரங்களை இழந்து நிற்பார்கள் என்ற கணக்கு தெரியுமா? சரி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டாம், படித்த நமக்காவது தெரியுமா?, கழிப்பிடவசதி கூட இல்லாமல் தமிழகத்தில் 70 இலட்சம் குடும்பங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லுது ஆனா நம்ம அரசாங்கம் அதற்கு முயற்சி செய்யவில்லை ஆனா கலர் டி.வி கொடுக்குது, நாம அதைபற்றி கவலைப் பட்டிருப்போமா? படிக்க கூட வசதி இல்லாம எத்தனையோ சிறார்கள் இருக்காங்க அவுங்க வாழ்க்கைக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிருப்போமா?...
ரொம்ப கூலா அரசியல் ஒரு சாக்கடைனு சொல்றோம் சரி அதை கொஞ்சம் சுத்தப்படுத்ததான் முயற்சிக்க மாட்டோம், குறைந்தபட்சம் வார்டு கவுன்சிலர்ல நம்முடைய முயற்சிய தொடங்கலாமே... அத செய்ய மாட்டோம், சரி சாதிகள் பற்றி, அதன் கொடுமை பற்றி பக்கம் பக்கமா வசனம் பேசுறோம், கவிதை எழுதுறோம் ஆனா நம்முடைய விண்ணப்பப்படிவங்கள்ல இன்ன சாதின்னு சரியா எழுதுறோம்... ரொம்ப சரியா நம்முடைய சாதியில மட்டும் தான் திருமணம் பண்ணுவோம்....
ஏங்க நாம கண்ணுக்கு முன்னாடி இத்தனை கொடுமைகள் நடந்தாலும், நம்மளே இத்தனை தவறுகள் செய்தாலும் அதை பற்றியெல்லாம் கவலை படாமல், மெகாத் தொடர்களிலும் , சினிமாவிலும், வெட்டி அரட்டையிலும் நம்முடைய பயணம் சிறப்பா போய்கிட்டு இருக்கு....
நாம செய்யுறது சரியா?
4 comments:
//நாமெல்லாம் எந்தப்பிரச்சனையிலும் பங்கெடுக்க முயற்சிப்பதில்லை, சமூக பிரச்சனைகளை நினைத்து கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தயாராய் இருக்கும் நாம் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயாரா? //
மிகச்சரியா சொல்லி இருக்கீங்க. இதப்படிக்கும்போது மட்டும் பட படன்னு இருக்கும்.
படிச்சு முடிச்சதும் கைய சொறிஞ்சுவிட்டுட்டு நமீதா படம் பாக்க கிளம்பிடுவோம்.
வெளங்காத கூட்டம் நம்ம கூட்டம்.
அவன் அவன் குடும்பத்தில் பிரச்சனை வரும்போது மட்டுமே முழிப்பு வருகிறது நம்மவர்க்கு.
திருந்தாது.
தமிழ்மணத்தில் இணைஞ்சிட்டீங்களா? :-) வாழ்த்துக்கள் சார்லஸ். மறுமொழி மட்டுறுத்தல் செய்யுங்க, அப்புறம் மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு செய்யுங்க. தமிழ்மண உதவிப் பக்கம் பாருங்க.
\"பொது இடத்துல குப்பை போடுறது( பேருந்து பயணச்சீட்டாக இருந்தாலும் அதுவும் குப்பை தான்), எச்சில் துப்புறது ஆரம்பிச்சு.... பொது பிரச்சனை வரைக்கும் எதுல நாம ஒழுங்கா இருக்கோம். \"
சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கிறீர்கள், தொடர்ந்து நிறைய எழுதுங்கள், வாழ்த்துக்கள்!!
சும்மா நச்சுன்னு சொன்ன சரியா , take some steps, for speaking it's ok but in pratical it's very difficult
Post a Comment